Thursday, 29 January 2015

சிந்துவெளி நாகரிகம் திராவிட மொழியைச் சார்ந்ததே.....!


சிந்துவெளி நாகரிகம் திராவிட மொழியைச் சார்ந் தது. சிந்துவெளி நாகரிகம் திராவிட சமுதாயத்தைச் சார்ந்தது. மொகஞ்சதா ரோவில் கிடைத்த முது கைக் காட்டி உட்கார்ந்த நிலையிலான விலங்கு, கொக்கி, நாற்சந்தி, குவளை வடிவ முத்திரைகள் ஆய்வு செய்யப்பட்டன. இவற்றில் விலங்கு வடி வம் பண்டமாற்று முறை, கொக்கி வடிவம் வாங் குதல், எடுத்துக் கொள் வது, நாற்சந்தி வடிவம் தெருக்கள் அடங்கிய நகரம், கிராமம் என்பதை உணர்த்துகிறது. குவளை வடிவம் சிந்துவெளியில் அதிகம் காணப்படுகிறது. சொல்லின் இறுதியில் காணப்படும் இந்த வடி வம் அன், நகரத் தலை வன், பாண்டி, பாண்டி யன் போன்றவற்றைக் குறிக்கிறது. இதற்கு இணை யான வார்த்தைகள் பழந் தமிழிலும் உள்ளன. இந்த 4 எழுத்துகளையும் சேர்த்து வாசிக்கும்போது நகர வணிகன் என்ற வாக்கியம் கிடைக்கிறது. இதை, மாற செழிய வழு திபாண்டியன் எனவும் வாசிக்க முடியும்.
இதையெல்லாம் ஆராய்ந்து பார்க்கும் போது சிந்துவெளியில் பேசியது ஒரு திராவிட மொழி. அங்கு வாழ்ந்த மக்கள் புலம்பெயர்ந்து தென்னகத்துக்கு வந்த தால், சிந்துவெளி மொழிக் கூறுகள் பழந்தமிழ் மொழி யில் காணப்படுகின்றன என்பது என் கருத்து


வெளியிலிருந்து வந்த ஆரியர்கள் சிந்துவெளியில் குடியேறியதால் அங்கு இந்திய- ஆரிய சமுதாயம் உருவாகியிருக்கலாம். இந்திய ஆரியப் பண்பாட்டில் இருந்த ரிக் வேதத்தில் உள்ள வார்த்தைகள் சிந்து வெளியில் இருந்து கடன் மொழியாகப் பெறப்பட்டிருக் கின்றன. ரிக் வேதத்தில் வரும் பூசன் என்ற கட வுளின் பெயர் சிந்துவெளி மக்களிடம் இருந்து எடுக்கப் பட்டதாக அறிய முடிகிறது.

பாண்டியர்களின் மூதா தையர்கள் சிந்துவெளியில் வணிகத்தில் ஈடுபட்டிருக் கலாம். அவர்கள் தெற்கு நோக்கி நகர்ந்து, திராவிட மொழி பேசியிருக்கலாம். குறிப்பாக, பண்டைய தமிழைப் பேசியிருக்கலாம்.
எனவே, சிந்துவெளி நாகரிகம் வேதப் பண் பாட்டைவிட காலத்தால் மிகப் பழைமையானது. சிந்துவெளிக் குறியீடு களுக்கும், பண்டைய தமிழ் வார்த்தைகளுக்கு மான தொடர்பு அதிக மாக இருப்பதை சங்க காலத் தமிழ்ச் சொற்கள் மூலம் அறியலாம். எனவே, சிந்துவெளி நாகரிக மொழி தொல் திராவிட வடிவம் கொண்டது.